ஆசை மகள் தாய் சேய் நலம் – 1.0 & 2.0
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
“இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை”
வாகை ஆண்டின் முதல் மாவட்ட செயல்திட்டம் ஆசை மகள் தாய் சேய் நலம் – 1.0 ஜூலை மாதம் 9-ம் நாள் காலை 10 மணி முதல் 11 மணி வரை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக Rtn.Dr. பாரதி கார்த்திகா அவர்கள் தாய் சேய் நலம் பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்விழாவில் Rtn. மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் அவர்கள் கலந்துகொண்டு கௌரவித்துக் கொடுத்தார். இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் வழங்கினோம்.
“பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை”
வாகை ஆண்டின் இரண்டாவது மாவட்ட செயல் திட்டம் “ஆசை மகள் சமுதாய வளைகாப்பு – 2.0” ஜூலை மாதம் 9-ம் நாள் காலை 10 மணியளவில் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 60 நபர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினோம்.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
Rtn. யாஸ்மின் சர்தார்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – ஆசை மகள் (2024-2025)
Rtn. பிரதீபா பரமசிவம்
திட்ட தலைவர் (2024-2025)
ரோட்டரிகிளப்ஆப்கரூர்ஏஞ்சல்ஸ்
வாகை_ஆண்டு_2024-25
மாவட்டம்_3000












